நீட் பயிற்சி பெற 15 ஆயிரம் மாணவர்கள் பதிவு

தமிழக அரசு வழங்கும் நீட் பயிற்சிக்கு, 15 ஆயிரம் மாணவர்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
நீட் பயிற்சி பெற 15 ஆயிரம் மாணவர்கள் பதிவு
Published on

அடுத்த ஆண்டு நடைபெறும் நீட் தேர்வுக்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க அரசு தயாராகி வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து இதுவரை 14 ஆயிரத்து 975 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் ஆயிரத்து 380 மாணவர்களும், குறைந்த பட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 70 மாணவர்களும் பதிவு செய்துள்ளனர்.கடந்த ஆண்டு 19 ஆயிரத்து 680 மாணவர்கள் பதிவு செய்த நிலையில், இறுதியாக 6 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இதில் ஆயிரத்து 615 பேர் தேர்ச்சி பெற்றனர்.அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அமலுக்கு வருவதால் இந்த ஆண்டு 300 பேர் மருத்துவ படிப்பில் சேர உள்ளனர் .அடுத்த ஆண்டு 13 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் கலந்தாய்வில் இடம்பெறுவதால் , அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க கூடிய இடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதனால் அதிகமான மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com