நடுரோட்டில் சாய்ந்து கிடந்த சிறுத்தை.. பீதியில் நின்ற கூட்டம்.. அடுத்த நொடி எதிர்பாரா காட்சி
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, இருசக்கர வாகனம் மோதி சாலையில் படுத்து கிடந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில், கூடலூரில் இருந்து நாடுகாணி நோக்கி சென்ற போது, மரப்பாலம் பகுதி அருகே இரண்டு சிறுத்தைகள் சாலையை கடந்துள்ளன. அதில் ஒரு சிறுத்தை மீது இருசக்கர வாகனம் மோதிய நிலையில், காயமடைந்த சிறுத்தை சாலையிலேயே படுத்து கிடந்தது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து, சிறிது நேரத்திற்கு பின், சிறுத்தை சாலையில் இருந்து எழுந்து வனப்பகுதிக்குள் ஓடியது.
Next Story
