கன்னி கோவில் அருகே ரத்த வெள்ளத்தில் திமுக பிரமுகர் - பகீர் பின்னணி

x

வேலூர் மாவட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை கத்தியால் வெட்டி விட்டு தப்பிய சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் குணசுந்தரியின் கணவரான

திமுக பிரமுகர் பாலசந்தரை கன்னி கோவில் அருகே ஒரு கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியுள்ளனர். இதில் தலையில் காயமடைந்த அவருக்கு ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக லத்தேரி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, விரிஞ்சிபுரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ரமேஷின் மனைவியோடு பாலசந்தர் தகாத உறவில் இருந்ததால், வெட்டியதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்