CBCID ஆபிஸ் அருகிலே ஜல்சா.. விடிய விடிய "எய்ட்ஸ்" விபச்சாரம்.. குலைநடுக்கத்தில் கஸ்டமர்கள் - சேலத்தையே சிதறவிட்ட புது டைப் "ரெட் லைட்"

x

சேலத்தில், சிபிசிஐடி அலுவலகம் அருகிலேயே வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் செய்து வந்த தம்பதி உட்பட 7 பேரை போலீசார் கைது செய்ததன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

சேலம் நெடுஞ்சாலை நகர் அருகில் உள்ள கிருஷ்ணா தெருவில் சிபிசிஐடி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

அதே பகுதியில் சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்து 200 அடி தூரம் உள்ள ஒரு வீட்டை, ஒரு தம்பதி வாடகைக்கு எடுத்து, பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில், சம்பந்தப்பட்ட வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை செய்தபோது, பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதும், அதற்கு மூளையாக திவ்யா - பாலமுரளி தம்பதி இருந்து வருவதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், போலீசார் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

தன்னார்வலர் தொண்டு நிறுவனம் மூலம், சேலம் அரசு மருத்துவமனையில், எச்ஐவி பிரிவில், கடந்த 4 ஆண்டுகளாக திவ்யா ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்து விலகியதும் தெரியவந்தது.

அதேபோல் அவரது கணவர் பாலமுரளி, சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருவதையும் போலீசார் உறுதிப்படுத்தினர்.

சேலம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக திவ்யா பணியாற்றி வந்தபோது, எச்ஐவியால் பாதிக்கப்பட்டு கணவரை இழந்த ஏராளமான பெண்கள், தங்களுக்கும் எச்ஐவி இருக்குமோ என்ற சந்தேகத்தில் திவ்யாவிடம் கவுன்சிலிங்கிற்கு வந்துள்ளனர்.

திவ்யாவிற்கு ஏராளமான கடன்கள் இருந்ததால், அதனை சமாளிக்க பணம் சம்பாதிப்பதற்கான வழியை மாற்றி யோசித்துள்ளார்.

அதன்படி கடனில் இருந்து தப்பிக்க, ஒரு கட்டத்தில் கவுன்சிலிங்கிற்கு வரும் பெண்களையே ஆயுதமாக பயன்படுத்த திட்டம் தீட்டியுள்ளார் திவ்யாவும், அவரது கணவர் பாலமுரளியும்...

அதன்படி, மருத்துவமனைக்கு கவுன்சிலிங்கிற்காக வரும் பெண்களின் மனநிலையும், அவர்களது பின்புலத்தையும் அறிந்து கொண்ட திவ்யா, மூளைச்சலவை செய்துள்ளார்....

அதாவது, கணவரும் இல்லை... வருமானத்திற்கு என்ன செய்வீர்கள்?... நான் சொல்வதை கேட்டால் வருமானம் கிடைக்கும் என ஏதோ கருணையோடு பேசுவதுபோல் பேச, அதற்கு சம்மதிக்கும் பெண்களை பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார்.

இதற்காகவே, தனது ஆண் நண்பர் தியாகு என்ற தியாகராஜன் மூலம், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகம் அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார்.

அதன்படி, கவுன்சிலிங்கிற்கு வரும் பெண்களை, மூளைச்சலவை செய்து, அதில் ஓகே ஆகும் பெண்களை, தனது வாடகை வீட்டிற்கு அனுப்புவதும், அங்கு கணவர் பாலமுருளியும், தியாகராஜனும் வாடிக்கையாளர்களை அழைத்து வருவதும் வாடிக்கையாகவே இருந்து வந்துள்ளது.

இதற்காக ஒரு வாடிக்கையாளரிடம் 3 ஆயிரம் ரூபாய் பெறும் திவ்யா, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு வெறும் 500 ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், திவ்யாவின் கணவர் பாலமுரளி, மாநகராட்சி ஊழியர் என்பதால், அலுவலகத்தில் தனது காரியங்களை சாதிக்க, மாநகராட்சி அதிகாரிகளை வாடகை வீட்டிற்கு அழைத்து வந்து, தனது மனைவி திவ்யா மூலம் பாலியல் தொழில் ஈடுபடும் பெண்களை பலருக்கும் விருந்ததாக்கியுள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, திவ்யா, ‌அவரது கணவர் பாலமுரளி, உடந்தையாக செயல்பட்ட தியாகராஜன், சாமிவேல், மோகன் குமார், கௌசல்யா, தேவா ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாலமுரளி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக மாநகராட்சி அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்