``தமிழகத்தில் NDA ஆட்சி.. பாஜகவின் பங்கு’’ - தினத்தந்தி Exclusive பேட்டியில் அமித்ஷா அதிரடி
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா நம்பிக்கை
2026-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பா.ஜ.க அங்கம் வகிக்கும் என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
தினத்தந்திக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த சிறப்பு பேட்டியில், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க முயற்சி செய்கிறீர்களா? என்ற கேள்விக்கு, தான் யாரையும் ஒன்றிணைக்கவில்லை... அது அவர்களது கட்சி குறித்த விஷயம்... அவர்கள் தாங்களாகவே முடிவு எடுக்க வேண்டும் என்று பதிலளித்தார்.
தமிழகத்தில் பா.ஜ.க வளர்ச்சி குறித்த கேள்விக்கு, தேசிய ஜனநாயக கூட்டணி மிக வலுவான நிலையில் இருப்பதாக அமித்ஷா தெரிவித்தார்.
தமிழகத்தில் கூட்டணி அரசு அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் அரசு அமைக்கும்... அதில் பா.ஜ.க.வின் பங்கு இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேர்தலில் தாங்கள் அ.திமு.க தலைமையின்கீழ் போட்டியிடுவதாகவும், முதலமைச்சர் அ.தி.மு.க.வில் இருந்து வருவார் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால், ஆந்திரப்பிரதேசத்திற்கு வழங்கியதுபோல் சிறப்பு மேம்பாட்டு நிதி தமிழகத்திற்கு கிடைக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, தமிழகத்திற்கு ஏற்கனவே தாங்கள் நிறைய வழங்கியிருப்பதாகவும்,
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமைந்தால், நிச்சயமாக தங்களது பொறுப்புகள் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
