AI மூலம் தோன்றிய NCC மாஸ்டர்.. கண்கலங்கிய முன்னாள் மாணவர்கள்
புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் தோன்றிய என்சிசி மாஸ்டரை கண்டு அனைவரும் கண்கலங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது..புது வண்ணாரப்பேட்டையில் துறைமுக பொறுப்பு கழக பள்ளியில் 2002 -2003 ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி காலத்தில் எடுத்த புகைப்படங்கள் அடங்கிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது.அதில் அந்த பள்ளியில் என்சிசி மாஸ்டராக பணியாற்றியவர் உயிரிழந்த நிலையில் ஏஐ தொழில்நுட்ப வசதி மூலம் அவர் பேசியதை கண்டு அனைவரும் கண்கலங்கினர்.
Next Story
