"கூட்டணி குறித்து நயினார் கருத்து.." திருமாவளவன் கொடுத்த ரிப்ளை

x

திமுக கூட்டணியில் இருந்து விசிகே வெளியே வர வேண்டும் என நயினார் நையாண்டியாக தான் கூறியதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரின் திருவுருவச்சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசை சார்ந்தே மாநில அரசு இயங்க வேண்டும் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கசப்பான உண்மை எனக்கூறினார். மேலும், திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேவர வேண்டும் என நயினார் நாகேந்திரன் நய்யாண்டியாகத்தான் பேசியதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்