திருமாவளவனை சாடிய நயினார் நாகேந்திரன்

x

பஹல்காம் சம்பவத்தில், விசிக தலைவர் திருமாவளவன், பாஜகவை விமர்சித்த நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்து பேசியுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள மகராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவருக்கும் நாட்டுப்பற்று வேண்டும் எனவும், தொலைக்காட்சியில் வரவேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது எனவும் விசிக தலைவர் திருமாவளவனை சாடினார்.


Next Story

மேலும் செய்திகள்