சீனாவை புரட்டி எடுத்த இயற்கை... நீருக்குள் மிதக்கும் தேசம்

x

விபா Wipha புயல் ஹாங்காங்கை தாக்கிய நிலையில், சீனாவின் தெற்குப் பகுதியிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.

சீனாவின் குவான்டாங்க் Guangdong மாகாணத்தில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. சுமார் 56 அடி உயர ராட்சத மரம் வேரோடு சாய்ந்ததில் அவ்வழியாக வந்த வாகனம் ஒன்று சிக்கியது. இதையடுத்து அதில் இருந்த ஓட்டுநரை மீட்புக்குழுவினர் மீட்டதுடன், மரக்கிளைகளையும் அப்புறப்படுத்தினர்.

இதனிடையே, வெள்ளம் சூழ்ந்த சாலையில் ஒருவர் காரை ஓட்டிச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்