Madurai | "தமிழ் மண்ணில் தேசியம் ஒருபோதும் வீழாது.." - மேடையில் உரக்க சொன்ன சி.பி ராதாகிருஷ்ணன்

"தமிழ் மண்ணில் தேசியம் ஒருபோதும் வீழாது.."

"தமிழ் மண்ணில் தேசியம் ஒருபோதும் வீழாது" மதுரை கப்பலூரில், வ. உ. சிதம்பரனாருக்கு 140 அடி உயரத்தில் முழு திருவுருவச் சிலை அமைக்கப்பட உள்ளது. மதுரை வண்டியூரில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில், குடியரசுத் துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். விழாவில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர்கள் சுந்தர் சி, விஜயகுமார், செங்கோல் ஆதினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன், யார் எத்தனை முயற்சி செய்தாலும், தமிழ் மண்ணில் தேசியம் ஒருபோதும் வீழாது என்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com