தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ மாணவர்கள் போராட்டம்

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ மாணவர்கள் போராட்டம்
Published on

சேலம் :

அதேபோல சேலம் மாவட்டத்தில் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவ மாணவர்கள் கண்களை கட்டிக்கொண்டு வெயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயுஷ் மருத்துவர்கள், 6 மாத பயிற்சிக்கு பின் மாற்று மருத்துவத்தையும் மேற்கொள்ளலாம் என்ற மத்திய அரசின் முடிவை ரத்துசெய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

தஞ்சை :

தஞ்சையில் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அரசு தலைமை மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மருத்துவ மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் படிப்பின் இறுதி ஆண்டில் நெக்ஸ்ட் தேர்வு நடத்துவதற்கும், அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

X

Thanthi TV
www.thanthitv.com