சேலம் அரசு பொது மருத்துவமனையில் தேசிய சுகாதார இயக்குநர் ஆய்வு

சேலம் அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்புக்கான நடவடிக்கைகள் குறித்து தேசிய சுகாதார இயக்குனர் தாரேஸ் அகமது நேரில் ஆய்வு செய்தார்.
சேலம் அரசு பொது மருத்துவமனையில் தேசிய சுகாதார இயக்குநர் ஆய்வு
Published on
சேலம் அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்புக்கான நடவடிக்கைகள் குறித்து தேசிய சுகாதார இயக்குனர் தாரேஸ் அகமது நேரில் ஆய்வு செய்தார். தமிழகம் முழுவதும் பல்வேறு காய்ச்சல்கள் பரவி வரும் நிலையில், நோய் தீவிரத்தை கட்டுப்படுத்த அரசு போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் ஆய்வு மேற்கொண்ட தாரேஸ் அகமது, செய்தியாளர்களை சந்தித்த போது, 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், நோய்க்கு தேவையான அனைத்து மருந்துகளும் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com