நத்தம் அருகே மதுபோதையில் தகராறு : 6 பேருக்கு அரிவாள் வெட்டு- போலீசார் குவிப்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.
நத்தம் அருகே மதுபோதையில் தகராறு : 6 பேருக்கு அரிவாள் வெட்டு- போலீசார் குவிப்பு
Published on
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள வத்திப்பட்டி கே.கே நகர் பகுதிக்குள் குடிபோதையில் வந்த இளைஞர்களுக்கும், அப்பகுதி குடியிருப்புவாசிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் மோதலாக மாறி, மதுபோதையில் வந்தவா்களில் சிலர் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் கே.கே நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 6 பேரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவா்கள் உடனடியாக நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக, பதற்றம் நிலவுவதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com