

நெல்லை மாவட்டம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உற்சவர் தோத்தாத்ரி சுவாமி அவரது தாயார் மற்றும் பூதேவியுடன் தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் பரமபத வாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.