Nanguneri Murder | நாங்குநேரி இரட்டை கொலை.. MLA காரை முற்றுகையிட்டு மக்கள் செய்த செயல்

நாங்குநேரி இரட்டை கொலை.. MLA காரை முற்றுகையிட்டு மக்கள் செய்த செயல்

நாங்குநேரி இரட்டை கொலை சம்பவத்தில் எம்எல்ஏ காரை முற்றுகையிட்ட பொதுமக்கள் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நடைபெற்ற இரட்டை கொலையில், உயிரிழந்த மாற்றுத்திறனாளி ஜான் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் காரை பொதுமக்கள் சிலர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், “தங்களுக்கு நிதி வேண்டாம், நீதி வேண்டும்“ எனக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது, பின்னர் அங்கிருந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com