

கல்லூரியில் சேர்ந்து ஒரு செமஸ்டர் முடிந்த நிலையில், இன்னும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படவில்லை எனக்கூறி, சென்னை நந்தனம் அரசு கல்லூரி மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பஸ் பாஸை உடனடியாக வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வலியுறுத்தினர்.