"மே 15-க்குள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகைகள்" - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

x

விழுப்புரத்தில் வருகிற மே 15 ஆம் தேதிக்குள் அனைத்து கடைகள், நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், மாவட்ட கண்காணிப்பு குழுக்கூட்டம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ஆட்சியர், தமிழ்நாடு கடைகள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் சட்டத்தின்படி, விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிற மே 15ம் தேதிக்குள் 100 சதவீதம் தமிழில் பெயர் பலகை வைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றார். மீறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என்றும் இதனை கண்காணிக்க குழு அமைக்கபடும் என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்