ஆபரேஷனை தொடங்கிய போலீஸ் - சிக்கிய 22 கேவலவாதிகள்
குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த பள்ளிபாளையம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரை, கஞ்சா உள்ளிட்ட பொருட்களின் விற்பனையை தடுக்கும் நோக்கில் 15-க்கும் மேற்பட்ட போலீசார் நகரின் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் 3 இளைஞர்களிடமிருந்து 103 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், குமாரபாளையம் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 22 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சுமார் அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
