``இதுக்கா 10 கோடிக்கு பஸ்ஸ்டாண்ட் கட்டியிருக்கு.. ஒரு பஸ்ஸையும் ஓட விட மாட்டேன்'' - கலெக்டர் அதிரடி

x

``இதுக்கா 10 கோடிக்கு பஸ்ஸ்டாண்ட் கட்டியிருக்கு.. ஒரு பஸ்ஸையும் ஓட விட மாட்டேன்'' - கலெக்டர் அதிரடி


  • நாமக்கல் அருகே பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியர், பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் முறையாக வந்து செல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
  • மல்லசமுத்திரம் பேருந்து நிலையத்தில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு செய்த போது, பேருந்துகள் உள்ளே வராமல் சென்றன.
  • இதனை கண்டு கோபம் அடைந்த ஆட்சியர், பேருந்துகள் உள்ளே வராமல் செல்வதற்கா? 10 கோடி ரூபாய் செலவு செய்துபேருந்து நிலையம் கட்டிவிடப்பட்டிருக்கிறது என அதிகாரிகளிடம் கடிந்துகொண்டார்.
  • தொடர்ந்து, கழிவறை தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா? என்பதையும் அவர் ஆய்வு செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்