Namakkal | பகலில் நோட்டம்.. இரவில் ஆட்டம் - நைசாக புகுந்து செய்த வேலைய நீங்களே பாருங்க
Namakkal | பகலில் நோட்டம்.. இரவில் ஆட்டம் - நைசாக புகுந்து செய்த வேலைய நீங்களே பாருங்க
பகலில் நோட்டம்.. இரவில் ஆட்டம் - நைசாக புகுந்து செய்த வேலைய நீங்களே பாருங்க நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையத்தில் மளிகைக் கடையில் ஒரு லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கடந்த 16-ஆம் தேதி பொருட்கள் வாங்குவது போல் வந்த இருவர், கடையை நோட்டமிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அதிகாலை நேரத்தில் ஹெல்மட் அணிந்தபடி கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அவர்கள், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்து, சிசிடிவி கேமராவை வேறு திசையில் திருப்பிவைத்து தப்பிச் சென்றனர். கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வேலகவுண்டம்பட்டி போலீசார், மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
