Namakkal | வேட்டியால் மனைவி கழுத்தை இறுக்கி கொன்ற கொடூர கணவன்.. மாமனார் சொத்தால் ஏற்பட்ட துயரம்
நாமக்கல்லில் மாமனார் சொத்துக்கு ஆசைப்பட்டு மனைவியை கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மேற்கு காவேரிப்பட்டியை சேர்ந்த பாஸ்கரனுக்கும், அவரது மனைவி சித்ராவுக்கும் ஏற்பட்ட தகராறில், வேஷ்டியால் கழுத்தை இறுக்கி மனைவியை பாஸ்கரன் கொலை செய்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, சித்ராவின் தந்தை பெரியசாமியின் பெயரில் நிலத்தைப் பிரித்து கேட்டபோது ஏற்பட்ட தகராறில் மனைவியை கொலை செய்தது தெரியவந்தது.
Next Story
