ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம் - நாமக்கலில் பரபரப்பு..

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு குறைந்தபட்ச ஊதியம், ESI, PF வழங்ககோரி ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மேயர், ஆணையாளர்களின் சொந்த வேலைக்கு தங்களை பயன்படுத்துவதாகவும் , குப்பையில் கிடக்கும் இரும்பு பொருட்களை விற்று கொடுக்கா விட்டால் வேலை வழங்கமாட்டோம் என மிரட்டுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் , தகாத வார்த்தையில் திட்டுவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர்கள் முன் வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com