

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து, பெண்கள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தனியார் நூற்பாலைக்கு முன்பு திரண்டனர். தகவலறிந்து வந்த காவல் ஆய்வாளர் சமூக விலகலை பின்பற்றாமல் போராட்டம் செய்ய கூடாது என அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஆலை நிர்வாகத்திடம் பேசி சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது