Namakkal Old Lady Murder | மூதாட்டியின் தலையில் கல்லைப்போட்டு கதையை முடித்த தம்பதி
Namakkal Old Lady Murder | மூதாட்டியின் தலையில் கல்லைப்போட்டு கதையை முடித்த தம்பதி - 24 மணி நேரத்தில் சிக்கியது எப்படி? திருச்செங்கோடு அருகே 90 மூதாட்டியை படுகொலை செய்த வழக்கில், தம்பதி கைது செய்யப்பட்டனர். தோக்கவாடி ஊராட்சி காளி வேலம்பாளையம் பகுதியில் தனியாக வசித்து வந்த ரத்தினம்மாள், கட்டிட வேலைக்காக வந்த ராமஜெயம் என்பவருக்கு வீடு வாடகைக்கு கொடுத்துள்ளார். சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டிற்கு வந்த ராமஜெயத்தை மூதாட்டி கண்டித்ததால், ஆத்திரத்தில் அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து தலையில் போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்தினம்மாள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பின்னர் உடலை கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்து, செல்போன் மற்றும் அரை பவுன் கம்மலை அவர் திருடிச் சென்றுள்ளார். திருடிய நகையை அடமானம் வைக்க முயன்றபோது சந்தேகம் ஏற்பட்ட நிலையில், மூதாட்டியின் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்தனர். ராமஜெயத்தின் மீது கொலை மற்றும் நகை பறிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி செல்வி மீது திருட்டு நகையை விற்க முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
