பிரியாணி கடையில் மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை - கடை உரிமையாளர் கைது

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில், முறைகேடாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த பிரியாணி கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
பிரியாணி கடையில் மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை - கடை உரிமையாளர் கைது
Published on

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில், முறைகேடாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த பிரியாணி கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். பரமத்தி வேலூர் நான்கு ரோட்டில் உள்ள பிரியாணி கடையில் அனுமதியின்றி மது விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் . சோதனை செய்த போலீசார் 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 470 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கடை உரிமையாளர் பத்மநாபனை கைது செய்து , போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com