Namakkal | பறந்த பாசக்கிளி.. நெஞ்சம் உடைந்த தம்பதி - நாமக்கல் நகரம் முழுவதும் போஸ்டர்
நாமக்கல்லில் பாசமாக வளர்த்த கிளி காணாமல் போனதால் மனமுடைந்த தம்பதியர் கிளியின் புகைப்படத்தை விளம்பர படுத்தி தேடி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். மோகனூர் பகுதியை சேர்ந்த சட்டநாதன்–செண்பகமாரி தம்பதியர் கடந்த மே மாதம் முதல் வளர்த்து வந்த சவுத் ஆப்பிரிக்கன் காங்கோ நாட்டு வகை கிளி வீட்டிலிருந்து திசைமாறி சென்றதாக கூறப்படுகிறது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கிளியின் புகைப்படம் மற்றும் தொடர்பு எண் சேர்த்து நகரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.மேலும் கிளியை கண்டுபிடித்து தருவோருக்கு 5 ஆயிரம் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
