நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் பெய்த கனமழை காரணமாக ஆகாய கங்கை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இருப்பினும் ஆகாயகங்கையின் அழகை ரசித்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் திரும்பி சென்றனர்.