Namakkal | Couple | பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் - காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த ஜோடி

x

நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்த நந்தினியும்

கோனேரிப்பட்டியை சேர்ந்த அஜய் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று காதலுடன் நந்தினி காரில் செல்ல முயன்றுள்ளார். இதனை கண்ட நந்தினியின் தந்தை

காரின் கண்ணாடியை உடைத்து மகளை மீட்க முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து காதலர்கள் நாமக்கல் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து திருமணம் செய்து கொண்டனர். பின் இருவரையும் காதலன் வீட்டிற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்