Namakkal | Cauvery River | இரவு நேரத்தில் காவிரியில் சாயத்துணிகள் சுத்தம் செய்த கும்பல்
Namakkal | Cauvery River | இரவு நேரத்தில் காவிரியில் சாயத்துணிகள் சுத்தம் செய்த கும்பல் | ஷாக்கிங் வீடியோ #namakkal #cauveryriver #river #thanthitv இரவு நேரத்தில் காவிரியில் சாயத்துணிகள் சுத்தம் செய்யப்படுவதாகப் புகார் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே, இரவு நேரங்களில் காவிரி ஆற்றில் சாயத்துணிகளைச் சுத்தம் செய்வதால் ஆற்று நீர் மாசடைவதாகப் புகார் எழுந்துள்ளது. குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் செயல்பட்டு வந்த சாயத் தொழிற்சாலைகள், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றியதால் அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டன. இதையடுத்து, காவிரி ஆற்றில் சாயக்கழிவு கலப்பதைத் தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சாயப்பட்டறை உரிமையாளர்கள், இரவு நேரங்களில் பள்ளிபாளையம் அருகே சொக்கராயன்பேட்டை பகுதியில் காவிரி ஆற்றில் அச்சிடப்பட்ட சாயத்துணிகளைக் கழுவுவதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆற்று நீர் மாசடைவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக உரிய ஆதாரங்களுடன் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ள பொதுமக்கள், காவிரி ஆற்றை மாசுபடுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
