நாமக்கலில் கார் திருடுபோன வழக்கு : காரை திருடியவன் கைது

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில், கடந்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி அரசு மருத்துவர் கனிமொழி என்பவரது வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த கார் திருடுபோனது.
நாமக்கலில் கார் திருடுபோன வழக்கு : காரை திருடியவன் கைது
Published on

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில், கடந்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி அரசு மருத்துவர் கனிமொழி என்பவரது வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த கார் திருடுபோனது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், குற்றவாளியை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், பரமத்திவேலூரில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, காரை வேகமாக ஓட்டி வந்தவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது, அவர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த கோபிநாத் என்பதும், அரசு மருத்துவரின் காரை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து மருத்துவரின் காரை பறிமுதல் செய்த போலீசார், அவனை கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com