Namakkal | அசுரவேகத்தில் மினி வேன் மீது மோதிய கார்.. தனியாக சிதறி விழுந்த கண்ணாடி - பதறவைக்கும் CCTV
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள வசந்தபுரத்தில் மினி மேன் மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கடந்த 18ஆம் தேதி காலை, திருச்செங்கோட்டில் இருந்து கரூர் நோக்கி சென்ற மினி வேன் மீது, எதிரே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தில் மினி வேன் ஓட்டுநர் கோகுல்நாத் பலத்த காயமடைந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கார் ஓட்டிய ஆர்த்திக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக நல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
