வேலூர் பெண்கள் தனிச்சிறையில் நளினி உண்ணாவிரதம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
வேலூர் பெண்கள் தனிச்சிறையில் நளினி உண்ணாவிரதம்
Published on
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 28 ஆண்டுகள் சிறையில் இருக்கும் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்றும், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள முருகனின் தந்தையை கவனித்துக்கொள்ள பரோல் வழங்க வேண்டும் எனவும் நளினி மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தன்னுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற காலதாமதம் ஆவதால் தன்னை கருணை கொலை செய்யக்கோரி நளினி சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமருக்கு மனு அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com