சக்தி விநாயகர் கோவில் திருக்கல்யாண நிகழ்ச்சி

நாகர்கோவில் கோட்டார் பகுதியில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
சக்தி விநாயகர் கோவில் திருக்கல்யாண நிகழ்ச்சி
Published on

நாகர்கோவில் கோட்டார் பகுதியில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோயிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு 36 கிலோ எடை கொண்ட முக்குறுணி கொழுக்கட்டை படையல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சுவேத விநாயகர் கோயில் திருக்கல்யாண வைபவம்

கும்பகோணத்தில் உள்ள சுவேத விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. விழாவின் ஏழாம் நாளான நேற்று திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமாகும் என்பது ஐதீகம். சிறப்பு அலங்காரத்தில் வாணி மற்றும் கமலாம்பிகையுடன் எழுந்தருளிய விநாயகரை, ஏராளமானோர் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com