Nagercoil | தனியார் நிதி நிறுவனத்தில் திடீர் தீ விபத்து... அதிர்ச்சியில் ஊழியர்கள்
தனியார் நிதி நிறுவனத்தில் திடீர் தீ விபத்து... அதிர்ச்சியில் ஊழியர்கள்
#nagercoil | #fireaccident தனியார் நிதி நிறுவனத்தில் திடீர் தீ விபத்து... அதிர்ச்சியில் ஊழியர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில், தனியார் நிதி நிறுவனத்தில் ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. ஜெனரேட்டரில் திடீரென ஏற்பட்ட மின் கசிவால், நிறுவனத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தீ பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
