குப்பை மேட்டை சுத்தம் செய்த மக்கள் - பாம்புகுட்டிகள் இருந்ததால் பரபரப்பு

நாகர்கோவிலில் இருந்து ராஜக்கமங்கலம் நெடுஞ்சாலையில் உள்ள பருத்திவிளை பகுதியில் சாலையோரம் புதர்களும் குப்பைகளும் குவிந்து பல மாதங்களாக அகற்றப்படாமல் இருந்தன.
குப்பை மேட்டை சுத்தம் செய்த மக்கள் - பாம்புகுட்டிகள் இருந்ததால் பரபரப்பு
Published on
நாகர்கோவிலில் இருந்து ராஜக்கமங்கலம் நெடுஞ்சாலையில் உள்ள பருத்திவிளை பகுதியில் சாலையோரம் புதர்களும் குப்பைகளும் குவிந்து பல மாதங்களாக அகற்றப்படாமல் இருந்தன.இதைப்பற்றி பலமுறை ஊராட்சியில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதையடுத்து அப்பகுதி பொதுமக்களும் தொண்டு ஆர்வலர்களும் இணைந்து அப்பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.பல நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் இருந்த புதரில் பாம்பு முட்டைகள்,பாம்பு குட்டிகள் காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com