

நாகர்கோவில் அருகே இளைஞர் ஒருவர் உறவினர்களால் கடத்தப்பட்ட தன் மனைவியை மீட்டுத்தருமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த துவரங்காட்டை சேர்ந்த பியூட்டலின் என்ற இளைஞர், மாற்று சமூகத்தை சேர்ந்த சரண்யா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதையடுத்து சரண்யா வீட்டார் காவல்நிலையத்தில் தங்கள் மகள் கடத்தப்பட்டதாக புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக காவல்நிலையம் வந்த பியூட்டலை, சரண்யாவின் உறவினர்கள் கடுமையாக தாக்கிவிட்டு, சரண்யாவையும் அழைத்து சென்றுள்ளனர். இந்த நிலையில் தன் மனைவியை மீட்டுத்தருமாறு பியூட்டல் காவல்கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.