NagarKovil | குடிநீர் என நினைத்து எடுத்து குடித்தவர் மரணம் - நாகர்கோவிலில் அதிர்ச்சி சம்பவம்
நாகர்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீருக்கு பதிலாக கொசு மருந்தை குடித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வடிவீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, கோட்டாறு பகுதியை சேர்ந்த பாஸ்கரன், சிகிச்சைக்கு வந்துள்ளார். மருத்துவரை சந்தித்து விட்டு, அங்குள்ள ஊழியர்களிடம் தண்ணீர் கேட்டுள்ளார். ஊழியர் கூறியதை தவறாக புரிந்து கொண்ட பாஸ்கர், கழிப்பறை அருகே வைக்கப்பட்டிருந்த கொசு மருந்தினை தண்ணீரென நினைத்து குடித்துள்ளார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Next Story
