பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாகை மாவட்டம் திருக்கடையூரில் ரேக்ளா ரேஸ் நடத்த தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சங்கமித்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் ரேக்ளா ரேஸ் நடத்தப்பட்டு அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது எனக் கேள்வி எழுப்பி, நாகை மாவட்டம் திருக்கடையூர் தேசிய நெடுஞ்சாலையில் ரேக்ளா ரேஸ் நடத்த தடை விதித்து உத்தரவிட்டனர்.