Nagapatinam | நாகையில்... ஷாக்கான வனத்துறையினர்

நாகையில்... ஷாக்கான வனத்துறையினர்

Nagapatinam | Sea Cucumbers | நாகையில்... ஷாக்கான வனத்துறையினர் #seacucumber #nagapattinam #thanthitv நாகையில் ரூ.10 கோடி கடல் அட்டைகள் பறிமுதல் நாகப்பட்டினத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. நாகை கீரைக்கொல்லைத் தெரு குடியிருப்பு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கைவிடப்பட்ட குடியிருப்பு அருகே கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அருகில் உள்ள வீட்டில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த 500 கிலோ கடல் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. சர்வதேச சந்தையில் இவற்றின் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள வீட்டின் உரிமையாளரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com