மீன் தொட்டியில் மிதந்த மது பாட்டில்கள்! நாகையில் பரபரப்பு
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மது பாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தி வரப்பட்டு தமிழக பகுதியில் பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாகை மாவட்ட காவல் துறையினர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கடத்தல் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டதோடு, காவல் நிலையங்கள், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனால் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து குறைந்த விலைக்கு மது பாட்டில்களை வாங்கி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மது பாட்டில்களை தமிழக பகுதிகளுக்கு கடத்தி வந்து அதிக விலைக்கு விற்று லாபம் அடைந்து வரும் சமூக விரோத செயலில் ஈடுபட்டு வந்த கடத்தல் மற்றும் வியாபாரிகளுக்கு பெரும் சவாலாக அமைந்தது.
