Nagapattinam | பைக் அதிவேகமாக மோதி தூக்கி வீசப்பட்ட முதியவர் - பதறவைக்கும் சிசிடிவி

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில், தெருவில் நடந்த சென்ற முதியவர் மீது அதிவேகமாக வந்த பைக் மோதிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... நாகூரை சேர்ந்த முஸ்தபா மரைக்காயர் என்பவர், தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த பைக், முதியவர் மீது அதிவேகமாக மோதியுள்ளது. பைக் மோதிவிட்டு நிற்காமல் சென்ற நிலையில், பலத்த காயமடைந்த முஸ்தபாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து நாகூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com