ஆந்திராவுக்கு இடமாறும் சிபிசிஎல் ஆலை? - போராட்டத்தில் குதித்த மக்கள்
நாகையில் இயங்கி வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, ஆந்திராவுக்கு மாற்றப்படுவதாக வெளியான தகவலை அடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்டோர் சிபிசிஎல் குடியிருப்பு வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆலை விரிவாக்கத்திற்காக, பனங்குடியைச் சுற்றி 591 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலையில், ஆலைக்கு நிலம் வழங்கிய மக்களுக்கு மறுவாழ்வு மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகையாக ஐந்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
Next Story
