சாரட் வண்டியில் தருமபுரம் ஆதீனம் வருகை : மல்லாரி இசை முழங்க உற்சாக வரவேற்பு

திருக்கடையூருக்கு வந்த தருமபுர ஆதீன புதிய மடாதிபதிக்கு மல்லாரி இசை முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
சாரட் வண்டியில் தருமபுரம் ஆதீனம் வருகை : மல்லாரி இசை முழங்க உற்சாக வரவேற்பு
Published on

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுர சைவ ஆதீனத்தின் 27வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சமீபத்தில் பதவியேற்றார். ஆதீன மடத்தின் கீழ் வைத்தீஸ்வரன்கோயில், திருக்கடையூர், பரசலூர், வதான்யேஸ்வரர் ஆலயம், சீர்காழி சட்டைநாதர் ஆலயம் உள்ளிட்ட 27ஆலயங்கள் அமைந்துள்ளன. பதவியேற்றதற்கு பின்னர் ஆதீன மடத்தின் கீழ் உள்ள ஆலயங்களுக்கு ஆதினம் விஜயம் செய்து தரிசனம் செய்து வருகின்றார். அதன்படி, திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சமேத அபிராமி அம்மன் ஆலயத்திற்கு இன்று எழுந்தருளினார். அவரை, பாரம்பரிய முறையில் ஆலயத்திற்கு குதிரை சாரட் வண்டியில் அழைத்து வந்தனர்

X

Thanthi TV
www.thanthitv.com