நாகை To இலங்கை - மீண்டும் தொடங்கிய கப்பல் போக்குவரத்து
கடல் சீற்றம் காரணமாக கடந்த 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நாகை - இலங்கை இடையிலான பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. கடல் சீற்றம் தணிந்து சீரான வானிலை நிலவியதால், முன்பதிவு செய்த பயணிகள் நாகை பயணியர் முனையத்திற்கு வருகை தந்தனர். பின்னர் அங்கிருந்து கப்பல் மூலம் 112 பயணிகள் இலங்கை காங்கேசன் துறைக்கு புறப்பட்டனர். இதேபோல் இலங்கை காங்கேசன் துறையில் இருந்து நாகைக்கு, இருநாட்டு பயணிகளும் கப்பலில் உற்சாகமாக பயணம் மேற்கொண்டனர்.
Next Story