மீன்பிடிப்பதில் தகராறு, இருகிராம மீனவர்கள் மோதல் : 17 பேர் காயம்

நாகையில் தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்தி பிடித்தது தொடர்பாக இரு கிராம மீனவர்கள் நடுக்கடலில் தாக்கிக்கொள்ளும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீன்பிடிப்பதில் தகராறு, இருகிராம மீனவர்கள் மோதல் : 17 பேர் காயம்
Published on
வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் அருகே கடலில் கீச்சாங்குப்பம் மீனவர்கள் 120 பேர் விசைப்படகில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது பைபர் படகில் சென்ற வெள்ளப்பள்ளம் மீனவர்கள் அந்த படகை வழிமறித்து சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக்கூடாது என்று கூறியுள்ளனர். இதனையடுத்து இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.இதில் காயம் அடைந்த 17 மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலை கண்டித்து வெள்ளப்பள்ளதில் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com