

நாகை அருகே அரசு பள்ளிக்கு நன்கொடை மற்றும் சீர் வரிசை வழங்கி, முன்னாள் மாணவர்கள் பொன் விழா எடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளி துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, அந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து 15 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கினர். தொடர்ந்து பள்ளியின் வளர்ச்சிக்காக வகுப்பறைகளை நவீனப்படுத்தி, ஸ்மார்ட் கிளாஸ் LED திரை, CCTV கண்காணிப்பு கேமிரா, கணினி, உள்ளிட்டவற்ற சீர் வரிசையாக வழங்கினர்.