டீசல் விலை உயர்வை கண்டித்து நாகையில் மீனவர்கள் ஐந்தாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக படகுகள் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஐந்து கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரியில்லா டீசல் வழங்கும் வரை மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.