நாகையில் 2-ம் ஆண்டு நெய்தல் கோடை விழா துவக்கம்

நாகப்பட்டினத்தில் இரண்டாம் ஆண்டு நெய்தல் கோடை விழா வெகு விமரிசையாக நேற்று துவங்கியது.
நாகையில் 2-ம் ஆண்டு நெய்தல் கோடை விழா துவக்கம்
Published on

நாகப்பட்டினத்தில் இரண்டாம் ஆண்டு நெய்தல் கோடை விழா வெகு விமரிசையாக நேற்று துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கோடை விழாவினை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். தென்னக கலை பண்பாட்டுத் துறை சார்பில் பரதநாட்டியம், சிலம்பாட்டம், கரகாட்டம் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்சிகள் நடைபெற்றன. இதில் பிரபல நாட்டிய தாரகை, பத்மா சுப்ரமணியன் குழுவினரின் பரதநாட்டியம் நடைபெற்றது. கோடைவிழா நடைபெறும் நாகை கடற்கரையில் மணல் சிற்பம் மற்றும் மலர் கண்காட்சி உள்ளிட்ட அரங்குகள் இடம்பெற்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்து சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com