நடுக்காவேரி - இளம்பெண் உறவினர்களிடம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை
திருவையாறு அருகே நடுக்காவேரி காவல் நிலையம் முன்பு, விஷம் குடித்து உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றுக் கொள்வது தொடர்பாக உறவினர்களிடம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். சகோதரர் மீது பொய் வழக்கு போட்டதாக கூறி காவல் நிலையம் முன்பு கிருத்திகா என்பவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். மரணத்திற்கு நீதி கேட்டு உறவினர்கள் பத்து நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், உடலை மூன்று நாளுக்குள் அடக்கம் செய்ய உறவினர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து பேச்சுவார்த்தை நடத்திய வட்டாட்சியரிடம், வழக்கறிஞர் மற்றும் கிராம மக்களுடன் ஆலோசித்து பதில் கூறுவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
Next Story
