திருச்சி சிவாவை கண்டித்து நாடார் மஹாஜன சங்கம் ஆர்ப்பாட்டம்

x

திருச்சி சிவாவை கண்டித்து நாடார் மஹாஜன சங்கம் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் திமுக எம்.பி., திருச்சி சிவாவை கண்டித்து நாடார் மஹாஜன சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து, திருச்சி சிவா எம்.பி.,யின் சர்ச்சை பேச்சை கண்டித்து பலரும் கண்டனங்களை தெரிவித்து வருவதுடன், பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நாடார் மஹாஜன சங்கம் சார்பில் பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜ் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள், சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது காமராஜர் குறித்து அவதூறாக பேசிய திருச்சி சிவாவுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்